எழும்பூர்-நாகர்கோவில் இடையே 14-ந்தேதி வரை தினசரி ‘பார்சல்’ எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


எழும்பூர்-நாகர்கோவில் இடையே 14-ந்தேதி வரை தினசரி ‘பார்சல்’ எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 9 April 2020 1:41 AM IST (Updated: 9 April 2020 1:41 AM IST)
t-max-icont-min-icon

எழும்பூர்-நாகர்கோவில் இடையே 14-ந்தேதி வரை தினசரி ‘பார்சல்’ எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அத்தியாவசிய பொருட்களுக்கான ‘பார்சல்’களை எடுத்து செல்லும் வகையில் கீழ்க்கண்ட ‘பார்சல்’ எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

* சென்னை எழும்பூர்-நாகர்கோவில் (வண்டி எண்: 00657) இடையே இன்று (வியாழக்கிழமை) முதல் 14-ந்தேதி வரை அதிகாலை 5 மணிக்கு எழும்பூரில் இருந்து விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு தினசரி இயக்கப்படுகிறது.

* மறுமார்க்கமாக நாகர்கோவில்-எழும்பூர் (00658) இடையே இன்று முதல் 14-ந்தேதி வரை காலை 8 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து, நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம் வழியாக எழும்பூருக்கு தினசரி இயக்கப்படும்.

* சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-டெல்லி(00646) இடையே இன்று முதல் 14-ந்தேதி வரை மாலை 6 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கூடூர், விஜயாவாடா, நாக்பூர், போபால் வழியாக டெல்லிக்கு தினசரி இயக்கப்படுகிறது.

* மறுமார்க்கமாக டெல்லி-எம்.ஜி.ஆர். சென்டிரல்(00647) இடையே நாளை(வெள்ளிக்கிழமை) முதல் 14-ந்தேதி வரை மாலை 6 மணிக்கு டெல்லியில் இருந்து ஆக்ரா, போபால், நாக்பூர், விஜயவாடா வழியாக சென்டிரலுக்கு தினசரி இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story