மே மாதம் நடைபெற இருந்த பொறியியல் தேர்வுகள் தள்ளிவைப்பு- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு


மே மாதம் நடைபெற இருந்த பொறியியல் தேர்வுகள் தள்ளிவைப்பு- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 April 2020 1:19 PM IST (Updated: 9 April 2020 1:19 PM IST)
t-max-icont-min-icon

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  

இதன்காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், மே மாதம் நடைபெறுவதாக இருந்த பொறியியல்  தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ஊரடங்கு காலம் முடிந்த பிறகு, புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.


Next Story