சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 163 ஆக உயர்வு


சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 163 ஆக உயர்வு
x
தினத்தந்தி 9 April 2020 6:55 PM IST (Updated: 9 April 2020 6:55 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 163 ஆக உயர்ந்து உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இதுவரை 7,267 பேருக்கு கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடந்து உள்ளது.  இவர்களில் 96 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 738ல் இருந்து 834 ஆக உயர்ந்து உள்ளது.

ஈரோட்டில் அதிக அளவாக இன்று ஒரே நாளில் 26 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து நெல்லையில் 16 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.

சென்னையில் 156 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதியாகி இருந்தது.  இந்நிலையில் சென்னையில் 7 பேருக்கு இன்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.  இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 163 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் அதிக பாதிப்பு எண்ணிக்கை வரிசையில் சென்னை முதல் இடம் வகிக்கிறது.  இதனை தொடர்ந்து கோவை (60) மற்றும் நெல்லை (58) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Next Story