தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு; மாவட்டம் வாரியாக விவரம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; மாவட்டம் வாரியாக விவரம் வருமாறு:
சென்னை
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏப்ரல் 9-ம் தேதியன்று கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் ஒரே நாளில், 698 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டி விட்டது. உயிரிழப்பு 169 ஆக உள்ளது.
கண்ணுக்கு தெரியும் எதிரியை விட, கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் சராசரியாக உயர்ந்து வருகிறது.
மராட்டிய மாநிலத்தில் ஆயிரத்து 297 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அம் மாநிலத்தில் மட்டும் 72 பேர் உயிரிழந்துள்ளனர்.இதில் மும்பையில் ஒரே நாளில், 79 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், அந்நகரில் மட்டும் 775 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் 8 பேரை பலி வாங்கிய கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது.டெல்லியில் 669 பேரும், ராஜஸ்தானில் 430 பேரும் , தெலங்கானாவில் 427 பேரும், உத்தரபிரதேசத்தில் 361 பேரும், கேரளாவில் 345 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
குஜராத் - 241, மத்திய பிரதேசம் - 229 , ஹரியானா - 147 , கர்நாடகா - 197, மேற்கு வங்காளம் - 103 மற்றும் பஞ்சாப்பில் 101 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 698 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 69ஆக உயர்ந்துள்ளது.கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது.
தமிழக அரசு ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கொரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 834 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் | ஏப்ரல் 8 | ஏப்ரல் 9 | மொத்தம் |
சென்னை | 156 | 7 | 163 |
கோயம்புத்தூர் | 60 | 60 | |
திண்டுக்கல் | 46 | 46 | |
திருநெல்வேலி | 40 | 16 | 56 |
ஈரோடு | 32 | 26 | 58 |
திருச்சி | 36 | 36 | |
நாமக்கல் | 33 | 8 | 41 |
ராணிப்பேட்டை | 27 | 27 | |
செங்கல்பட்டு | 24 | 4 | 28 |
மதுரை | 24 | 1 | 25 |
கரூர் | 23 | 23 | |
தேனி | 39 | 1 | 40 |
தூத்துக்குடி | 17 | 5 | 22 |
விழுப்புரம் | 20 | 20 | |
திருப்பூர் | 22 | 4 | 26 |
கடலூர் | 13 | 13 | |
சேலம் | 13 | 1 | 14 |
திருவள்ளூர் | 13 | 13 | |
திருவாரூர் | 12 | 1 | 13 |
விருதுநகர் | 11 | 11 | |
தஞ்சாவூர் | 11 | 11 | |
நாகப்பட்டினம் | 11 | 1 | 12 |
திருப்பத்தூர் | 11 | 5 | 16 |
திருவண்ணாமலை | 9 | 9 | |
கன்னியாகுமரி | 6 | 6 | |
காஞ்சிபுரம் | 6 | 6 | |
சிவகங்கை | 5 | 1 | 6 |
வேலூர் | 6 | 5 | 11 |
நீலகிரி | 4 | 4 | |
தென்காசி | 2 | 1 | 3 |
கள்ளக்குறிச்சி | 2 | 1 | 3 |
ராமநாதபுரம் | 2 | 2 | |
அரியலூர் | 1 | 1 | |
பெரம்பலூர் | 1 | 1 | |
மொத்தம் | 737 | 96 | 834 |
Related Tags :
Next Story