கொரோனா பாதிப்பு; மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல் அமைச்சர் ஆலோசனை
கொரோனா பாதிப்பினை கட்டுப்படுத்துவது பற்றி மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை,
நாடு முழுவதும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா பாதிப்பு தமிழகத்திலும் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 7,267 பேருக்கு கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடந்து உள்ளது. இவர்களில் 834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 8 பேர் பலியாகி உள்ளனர். 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 27 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் கொரோனா பாதிப்பினை கட்டுப்படுத்துவது பற்றி காணொலி காட்சி மூலம் பல்வேறு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசின் துறை சார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பு வராமல் தடுப்பது மற்றும் அதனை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சமூக பரவலில் இருந்து பொதுமக்களை காப்பது உள்ளிட்ட விசயங்கள் ஆலோசிக்கப்பட்டன.
Related Tags :
Next Story