யார் யார் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் மருத்துவ கவுன்சில்


யார் யார் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் மருத்துவ கவுன்சில்
x
தினத்தந்தி 10 April 2020 2:03 PM IST (Updated: 10 April 2020 2:03 PM IST)
t-max-icont-min-icon

யார் யார் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது

சென்னை

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412 ஆக உயர்ந்துள்ளது.  இவர்களில் 504 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு 199 பேர் பலியாகி உள்ளனர்.  5,709 பேர் 
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 834ஆக அதிகரித்து உள்ளது. 

கொரோனா தொற்று சோதனைக்காக சீனாவிலிருந்து ஒரு லட்சம் துரித சோதனை கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளது. தமிழகத்திற்கு இன்று வரும் இந்தக் கருவிகள் வந்தவுடன்  பரிசோதனை தொடங்கும் 
இந்தக் கருவிகள் கிடைத்தவுடன் விரைவாக வேகமாக ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும். அந்தப் பரிசோதனையின் முடிவுகள் 30 நிமிடங்களில் பெற முடியும். கொரோனா அதிகம் பாதித்த 
இடங்களுக்கு இந்த உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

துரித பரிசோதனை கருவிகள், சமூகப் பரவல் இருக்கிறதா என்பதை அறிய உதவும். இந்த கருவிகள் தடுத்து வைக்கப்பட்ட பகுதிகளில் பயன்படுத்தி சமூகப் பரவலை அறியவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
அண்ணா பல்கலைகழக ஜி.ஐ.எஸ் மேப்பிங் மூலமாக எந்தெந்த பகுதி மக்களுக்கு துரித பரிசோதனைகள் தேவைப்படும் என்பது கண்டறியப்படும்.

இந்த நிலையில் யார் யார் பரிசோதனைசெய்து கொள்ளவேண்டும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்து உள்ளது.அதன் விவரம் வருமாறு:

1. கொரோனா உறுதிசெய்யப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த அறிகுறிகள் அற்ற நபரும், அவருடனான தொடர்புக்கு பின்பு 5 நாள் முதல் 14-வது நாளுக்குள் ஒருமுறையேனும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் 
என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

2. கடைசி 14 நாட்களில் வெளிநாட்டு பயணத்தில் இருந்த அறிகுறிகள் உடைய நபர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

3.  தீவிர சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகள்

4. அறிகுறிகளைக் கொண்ட சுகாதாரப் பணியாளர்கள்

5. கொரோனா பாசிட்டிவ்வாக உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்து, அறிகுறிகளுடன் இருப்பவர்கள்

6. அதிக அளவிலாக கூட்டமாக வாழ்பவர்கள், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், மையங்களில் அறிகுறிகள் உடைய அனைவரும், அதாவது 7 நாட்கள் தொடர்ச்சியான அறிகுறிகள் எதுவாயினும் அவர்களும் ஆர்.டி பிசிஆர் முறையில் சோதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது ஐ.சி.எம்.ஆர்

ஐ.சி.எம்.ஆர்-இன் மூத்த விஞ்ஞானியான ராமன் கங்காகேத்கர், சமூகப் பரவல் என்னும் மூன்றாவது கட்டத்திற்கு இந்தியா செல்லவில்லை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story