திருச்சியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 26 வயதான நபர் குணமடைந்து, வீடு திரும்பினார்


திருச்சியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த  26 வயதான நபர் குணமடைந்து, வீடு திரும்பினார்
x
தினத்தந்தி 10 April 2020 3:24 PM IST (Updated: 10 April 2020 3:24 PM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஈரோட்டை சேர்ந்த 26 வயதான நபர் குணமடைந்து, வீடு திரும்பினார்

திருச்சி,

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக  அனுமதிக்கப்பட்டிருந்த ஈரோட்டைச் சோ்ந்த இளைஞரும், ராணிப்பேட்டையில் சிகிச்சை பெற்று வந்தவரும் குணமடைந்து வீடு திரும்பினர். 

ஈரோட்டைச் சோ்ந்த 24 வயது இளைஞா் மாா்ச் 22-ம் தேதி துபாயிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு நடத்திய மருத்துவப் பரிசோதனையில் சளி, காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞா் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில், அவரது பரிசோதனை முடிவு மார்ச் 26-ம் தேதிஅன்று வந்தது. அதில், அந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அந்த இளைஞர் உடல் நலம் தேறினார். அவர் சிகிச்சையில் தேறியதும், அவரது மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில் தொற்று இல்லை என உறுதியானது. இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு வாழ்த்து கூறி பரிசளித்து அனுப்பி வைத்தனர். அவரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.  இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில், கொரோனா பாதிப்புடன் கடந்த 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 26-வயது இளைஞரும் உடல் நலம் தேறி வீடு திரும்பினார்.  இவர்கள் இருவரும் உடல் நலம் தேறி  வீடு திரும்பினாலும் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story