25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள அரசு பள்ளிகள் பட்டியலை கேட்கவில்லை - கல்வித்துறை திட்டவட்டம்


25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள அரசு பள்ளிகள் பட்டியலை கேட்கவில்லை - கல்வித்துறை திட்டவட்டம்
x
தினத்தந்தி 11 April 2020 3:00 AM IST (Updated: 11 April 2020 2:53 AM IST)
t-max-icont-min-icon

25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள அரசு பள்ளிகள் பட்டியலை கேட்கவில்லை என்று கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் பட்டியலை தயாரித்து முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்ப வேண்டும் என்று கல்வித்துறை தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்தநிலையில், இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்ககத்தின் உயர் அதிகாரி ஒருவரை கேட்டபோது, ‘25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள அரசு பள்ளிகளின் பட்டியலை கேட்டு எந்த உத்தரவும் இதுவரை கல்வித்துறை சார்பில் பிறப்பிக்கப்படவில்லை. இது முற்றிலும் தவறான தகவல். இதை யாரும் நம்பவேண்டாம்’ என்றார்.

Next Story