முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமைச்செயலகத்தில் தொடங்கியது.
சென்னை,
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் 14 ஆம் தேதியோடு 21 நாட்கள் ஊரடங்கு முடிவுக்கு வர உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளன. ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் முறையே ஏப்ரல் 30, மே 1 ஆம் தேதி வரை என ஊரடங்கை நீட்டித்துள்ளன.
இந்த நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்க தமிழக அமைச்சரவை கூட்டம் கூடியுள்ளது. சென்னை தலைமைச்செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உள்பட அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முதல் அமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, தமிழக காவல் துறை உயர் அதிகாரிகளை முதல் அமைச்சர் பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஊரடங்கு மற்றும் சட்டம்- ஒழுங்கு குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
Related Tags :
Next Story