கொரோனா தடுப்பு நிவாரணத்துக்காக முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை செலுத்துவது எப்படி? - தமிழக அரசு விளக்கம்
கொரோனா தடுப்பு, நிவாரணத்துக்காக முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் எந்ததெந்த வழிகளில் நன்கொடை செலுத்தலாம் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், பொதுமக்கள் கொரோனா வைரஸ் நிவாரணத்துக்கான முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மனம் உவந்து பங்களிப்பினை வழங்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கான முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பங்களிக்க ‘கூகுள்பே’, ‘பேடிஎம்’ போன்ற தளங்களை இயக்க மக்கள் கோருகின்றனர். யூ.பி.ஐ. செயல்படுத்தப்படும் அனைத்து வங்கிகள் மற்றும் ‘போன்பே’, ‘கூகுள்பே’, ‘பேடிஎம்’, ‘மொபிவிக்’ போன்ற தளங்களின் செல்போன் அப்ளிகேசனில் இந்த வசதி ஏற்கனவே இயங்குகிறது. வங்கி அல்லது தளத்தின் பயன்பாட்டில் யூ.பி.ஐ. விருப்பத்தை தேர்ந்தெடுக்கவேண்டும். பின்னர் யூ.பி.ஐ. வி.பி.ஏ. tnc-m-p-rf@iob -ஐ உள்ளிட்டு, நன்கொடை அளிக்கவேண்டிய தொகையை உறுதிப்படுத்தவேண்டும்.
கிரெடிட், டெபிட் கார்டு
இதுதவிர வங்கி இணைய டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமாக https://er-e-c-e-ipt.tn.gov.in/cm-p-rf/cm-p-rf.html வழியாக நன்கொடை வழங்கலாம். அரசு துணை செயலாளர் மற்றும் பொருளாளர், கொரோனா நிவாரணத்துக்கான முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி, தமிழ்நாடு, இந்தியா. என்ற முகவரியில் குறுக்கு கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக நன்கொடை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி dsp-ay-c-e-ll.fi-n-dpt@tn.gov.in ஆகும்.
எலக்ட்ரானிக் கிளியரீங் சிஸ்டம் முறையில்
சேமிப்பு கணக்கு எண்: 117201000000070, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமைச்செயலகம் கிளை, சென்னை- 600009
ஐ.எப்.எஸ். குறியீடு: IO-BA 0001172 நன்கொடை அனுப்பலாம்.
CM-P-RF PAN எண்: AA-A-GC0038F .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story