35 லட்சம் தொழிலாளர்கள் வங்கிக் கணக்கில் கொரோனா நிவாரணம் செலுத்தும் பணி விரைவில் தொடக்கம்
35 லட்சத்து 24 ஆயிரத்து 712 தொழிலாளர்கள் வங்கிக்கணக்கில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1,000 செலுத்தும் பணி விரைவில் தொடங்க இருக்கிறது.
சென்னை,
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தினக்கூலி தொழிலாளர்களுக்கும் உதவ வேண்டும் என்ற கோரிக்கை அரசின் முன் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கட்டிட தொழிலாளர்கள் 12 லட்சத்து 13 ஆயிரத்து 882 பேருக்கும், ஆட்டோ ஓட்டுநர்கள் 83,500 பேருக்கும் தலா ரூ.1,000 மற்றும் 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதன்பின்னர், 15 நல வாரியங் களில் பதிவு செய்துள்ள 14 லட்சத்து 7 ஆயிரத்து 130 தொழிலா ளர்களுக்கு தலா ரூ.1,000 வழங் கப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, மேலும் 12 நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 7 லட்சம் தொழிலாளர்களுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தியது. அத்துடன், 1,370 பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும், ஈ.எஸ்.ஐ.யில் பதிவு செய்துள்ள 1 லட்சத்து 20 ஆயிரத்து 200 தொழிலாளர்களுக்கும் தலா ரூ.1,000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
ஆக, அமைப்பு சாரா தொழிலாளர்கள், பல்வேறு நலவாரிய உறுப்பினர்கள், ஆட்டோ ஓட்டு நர்கள், பட்டாசு ஆலை தொழிலாளர்கள் என 35 லட்சத்து 24 ஆயிரத்து 712 தொழிலாளர்கள் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.1,000 வரவு வைக்கப்பட இருக்கிறது. இந்தப் பணிகள் விரைவில் தொடங்குகிறது.
Related Tags :
Next Story