காவிரி மேலாண்மை விவகாரம்: மத்திய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் - காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்


காவிரி மேலாண்மை விவகாரம்: மத்திய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் - காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 May 2020 1:30 AM IST (Updated: 1 May 2020 1:25 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

சென்னை, 

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை ஆணையத்தை, ஜலசக்தி துறை நிர்வாக கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் ஜனாதிபதியால் கடந்த மாதம் 20-ந்தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆணையம் அமைப்பு குறித்து சுப்ரீம் கோர்ட்டு தெளிவான வரையறையை ஏற்கனவே உருவாக்கி உள்ளது. 

இதனால், தமிழக காவிரி உரிமை பறிபோய்விடுமோ? என அச்சம் ஏற்பட்டுள்ளது.தமிழக விவசாயிகளின் நலன் கருதி, தமிழக அரசு சட்ட வல்லுனர்களோடு ஆலோசித்து சுப்ரீம் கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு சென்று, அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

முன்னதாக காவிரி டெல்டா விவசாயிகள் சார்பில் மத்திய அரசின் அரசாணை நகல் தீயிட்டு எரித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்ட செயலாளர் சேரன் சு.செந்தில்குமார், மன்னார்குடி ஒன்றிய செயலாளர் எஸ்.மனோகரன் உடன் பங்கேற்றனர்.

Next Story