கீழ்கட்டளை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று
சென்னை கீழ்கட்டளை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரனோ தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
சென்னை,
சென்னை கீழ்கட்டளை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரனோ தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. முன்னதாக 31 வயது இளைஞர் ஒருவர், கொரோனா தொற்று காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது மனைவிக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், அவர்களது உறவினர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில், இளைஞரின் தாயார், மைத்துனர் மற்றும் 2 சிறுவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரனோ பாதித்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story