முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.306.4 கோடி நன்கொடை


முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.306.4 கோடி நன்கொடை
x
தினத்தந்தி 1 May 2020 2:17 PM IST (Updated: 1 May 2020 2:17 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.306.42 கோடி நன்கொடையாக வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

கொரோனா பாதிப்பு பேரிடர் காலமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன்படி தொழிலதிபர்கள் சிறு தொழில் அதிபர்கள், பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் வரையில் பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி வருகிறார்கள்.

இந்தநிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.  கடந்த 10 நாட்களில் மட்டும் 145.48 கோடி நிவாரண நிதி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.306.42 கோடி நன்கொடையாக வந்துள்ளது. கொரோனா தடுப்பு பணிக்கு தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்கிய அரசு ஊழியர்களுக்கு நன்றி.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story