8 டன் மருத்துவ பொருட்களுடன் சேலத்தில் இருந்து நாகலாந்துக்கு 1 லட்சம் லிட்டர் பால் - சிறப்பு ரெயிலில் கொண்டு செல்லப்பட்டது


8 டன் மருத்துவ பொருட்களுடன் சேலத்தில் இருந்து நாகலாந்துக்கு 1 லட்சம் லிட்டர் பால் - சிறப்பு ரெயிலில் கொண்டு செல்லப்பட்டது
x
தினத்தந்தி 2 May 2020 1:15 AM IST (Updated: 2 May 2020 1:04 AM IST)
t-max-icont-min-icon

1.15 லட்சம் லிட்டர் பால் மற்றும் 8 டன் மருத்துவ பொருட்கள் கொண்ட சிறப்பு சரக்கு ரெயில் ஒன்று சேலத்தில் இருந்து நாகலாந்துக்கு சென்றது.

சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டிருப்பதாவது:-

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக சரக்கு மற்றும் பார்சல் ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில் நாகாலாந்தில் உள்ள திமாபூருக்கு, சேலத்தில் இருந்து 1.15 லட்சம் லிட்டர் பால் மற்றும் 8 டன் மருத்துவ பொருட்கள் கொண்ட சிறப்பு சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டுச் சென்றது. தெற்கு ரெயில்வேயின் சேலம் கோட்டத்தின் சிறப்பு முயற்சிகளின் காரணமாக, இந்த ஊரடங்கு காலத்தின்போது ரூ.8.3 லட்சம் வருவாய் இந்திய ரெயில்வேக்கு கிடைத்துள்ளது. 

மேலும் சரக்குகளை ஏற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சரக்குகளை ஏற்றும் போதும் சமூக விலகல் கடைப்பிடிக்கப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவும் வகையில் சரக்குகளை ஏற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் முக கவசங்கள், கைகளை சுத்திகரிக்கும் சுத்திகரிப்பான் ஆகியவை வழங்கப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story