மின் கட்டணம் செலுத்த ஜூலை மாதம் வரை அவகாசம் வழங்க கோரி வழக்கு - ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை


மின் கட்டணம் செலுத்த ஜூலை மாதம் வரை அவகாசம் வழங்க கோரி வழக்கு - ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
x
தினத்தந்தி 2 May 2020 2:00 AM IST (Updated: 2 May 2020 1:24 AM IST)
t-max-icont-min-icon

மின் கட்டணம் செலுத்த ஜூலை மாதம் வரை அவகாசம் வழங்க கோரி வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ராஜசேகரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். 

அதேபோல சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் உற்பத்தி மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளன. சொத்து வரி, குடிநீர் கட்டணம், விவசாய கடன் தவணைகள் செலுத்துவதற்கான கால அவகாசம் வருகிற ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணங்களை வருகிற 6-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தற்போது நிலவும் சூழ்நிலையினால், இந்த கால அவகாசத்தை வருகிற ஜூலை 31-ந்தேதி வரை நீட்டிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Next Story