பிணத்தை கீழ்ப்பாக்கம் கல்லறையில் புதைக்க டாக்டரின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தால் விசாரணை - ஐகோர்ட்டு உத்தரவு
பிணத்தை கீழ்ப்பாக்கம் கல்லறையில் புதைக்க டாக்டரின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கொரோனா வைரஸ் தாக்கியதில் மரணமடைந்த டாக்டர் சைமன் ஹெர்குலஸ் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய அப்பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனால் டாக்டரின் உடல், வேலங்காடு சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த உடலை அங்கிருந்து தொண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்க செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சத்தியநாராயணன் செல்வானந்தன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள், உடலை வேலங்காடு சுடுகாட்டில் இருந்து எடுத்து கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யவேண்டும் என்று டாக்டர் சைமனின் மனைவி கோரிக்கை விடுத்தார்.
அந்த கோரிக்கையை சாத்தியம் இல்லை என்று கூறி மாநகராட்சி நிராகரித்து விட்டதாக, கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் கூறினார். ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கையை நிராகரித்து விட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. தள்ளுபடி செய்கிறோம். ஒருவேளை மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டாக்டர் சைமனின் குடும்ப உறுப்பினர் வழக்கு தொடர்ந்தால், அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்‘ என்று உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story