கமல்ஹாசன் அறிவிப்பு: மக்கள் நீதி மய்யம் கட்சி தொழிலாளர் அணி சின்னம் வெளியீடு
மக்கள் நீதி மய்யம் கட்சி தொழிலாளர் அணி சின்னத்தை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியீட்டுள்ளார்.
சென்னை,
நாட்டின் பொருளாதாரத்தை கட்டமைத்திடும் ஒவ்வொரு தொழிலாளியின், தனி பொருளாதாரமும் பலப்பட வாழ்த்துகிறேன். உழைப்பை மூல தனமாக்கி உயரும் வாழ்வு தாமதமாகலாம், தடைபடாது. இந்நிலை மாறும், தொழிலாளர் வாழ்வு ஏற்றம் பெறும். நம்பிக்கையுடன்.
நம் உலகை கட்டமைத்திடும் தொழிலாளர்கள் கொண்டாடும் தொழிலாளர் தினத்தன்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் “தொழிலாளர் அணியின் சின்னத்தை” வெளியிடுவதில் பெருமகிழ்வடைகிறோம். உழைப்பை அங்கீகரிப்போம். தொழிலாளர்களை கொண்டாடுவோம்.
மேற்கண்ட தகவலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருக்கிறார்.
Related Tags :
Next Story