கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்ற 7 பேருக்கு கொரோனா உறுதி; நாளை முழு ஊரடங்கு அமல்


கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்ற 7 பேருக்கு கொரோனா உறுதி; நாளை முழு ஊரடங்கு அமல்
x
தினத்தந்தி 2 May 2020 6:33 AM GMT (Updated: 2 May 2020 6:33 AM GMT)

சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்ற 7 பேருக்கு கொரோனா உறுதியானதன் எதிரொலியாக நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

கடலூர்,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனை தடுக்கும் பணியில் அரசு தீவிரமுடன் செயல்பட்டு வருகிறது.  எனினும், மக்கள் ஒத்துழைப்பு இன்றி இதற்கு சாத்தியமில்லை என்ற சூழல் உள்ளது.  இதில், சென்னையில் அதிக அளவாக 1,082 பேரும், தொடர்ந்து கோவையில் 141 பேரும் மற்றும் செங்கல்பட்டில் 86 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்ற 7 பேருக்கு கொரோனா உறுதியானது.  கோயம்பேட்டில் இருந்து சென்ற 400 பேரின் முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை.  இதனால் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் எதிரொலியாக, கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.  இதனால் நகரில் மருந்து, பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும்.  இந்த ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story