தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியானது- சென்னையில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி


தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட  முடிவுகள் வெளியானது- சென்னையில் கட்டுமானப்  பணிகளுக்கு அனுமதி
x
தினத்தந்தி 2 May 2020 4:48 PM IST (Updated: 2 May 2020 4:48 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் கட்டுக்குள் வராததால், நாடு முழுவதும் ஊரடங்கு வரும் 17 ஆம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் கட்டுக்குள் வராததால், நாடு முழுவதும் ஊரடங்கு வரும் 17 ஆம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று  ஊரடங்கு தொடர்பாக தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, எவை செயல்படலாம் என்ற தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் கீழ் காண்போம்:-

* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை 
*அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்  காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம்-
*சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10%  பணியாளர்களுடன் இயங்க அனுமதி
* சென்னை தவிர பிற பகுதிகளில் ஊரக பேருராட்சி பகுதிகளில் அனைத்து தொழிற்சாலைகளும் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி

* வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம்.
*மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப்பொருட்கள், மின் மோட்டார், கண்கண்ணாடி கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம். 

*ஊரக, நகர்ப்புற பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்"

* தொழிற்பேட்டையிலுள்ள ஜவுளி நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை"
*கிராமப்புறங்களிலுள்ள நூற்பாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.
* "நகராட்சி, மாநகராட்சிகளில் மால்கள், வணிக வளாகங்களை தவிர்த்து தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இயங்கலாம்.

*சென்னையை தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் 50 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்கள்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் செயல்பட  அனுமதி


Next Story