தமிழகத்தில் மேலும் 231 பேருக்கு கொரோனா தொற்று - மொத்த பாதிப்பு 2757 ஆக உயர்வு
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிரான போர் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுவே அதிக பாதிப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் இதையும் மிஞ்சும் வகையில் இன்று 231 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆக 2,757 அதிகரித்துள்ளது. மாநிலத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1257 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1341 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story