வெளிமாநிலத்தில் இருக்கும் தமிழர்கள் வர விரும்பினால் இணையதளத்தில் பதிவு செய்யலாம் - தமிழகத்தில் உள்ள பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு


வெளிமாநிலத்தில் இருக்கும் தமிழர்கள் வர விரும்பினால் இணையதளத்தில் பதிவு செய்யலாம் - தமிழகத்தில் உள்ள பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு
x
தினத்தந்தி 3 May 2020 2:15 AM IST (Updated: 3 May 2020 1:54 AM IST)
t-max-icont-min-icon

வெளிமாநிலத்தில் இருக்கும் தமிழர்கள் வர விரும்பினால் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, 

வெளி மாநிலத்தில் இருக்கும் தமிழர்கள், தமிழகம் வர விரும்பினால் இணையதளத்தில் பதிவு செய்யலாம். அதேபோல், தமிழகத்தில் உள்ள பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியாவில் இதர மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணைய முகப்பில் உள்ள “ Return to Tamil Nadu ” என்ற இணைய படிவம் (பச்சை நிற பதிவு பட்டன்) வாயிலாக பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்தோர், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது தங்கியுள்ளனர். அவர்கள் குறித்த விவரத்தை nonresidenttamil.org என்ற இணைய முகப்பில் (பழுப்பு நிற பதிவு பட்டன்) வாயிலாக பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story