மராட்டியத்தில் உள்ள தமிழக தொழிலாளர்களை அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்


மராட்டியத்தில் உள்ள தமிழக தொழிலாளர்களை அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 4 May 2020 2:52 PM IST (Updated: 4 May 2020 2:52 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் உள்ள தமிழக தொழிலாளர்களை அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மராட்டியத்தில் வாழும் தமிழகத்தொழிலாளர்களுடன் நடத்திய காணொலி உரையாடலில் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வர விரும்புகிறார்கள் எனத்தெரிந்துக்கொண்டேன். 

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவிடம் நானும் திமுகவின் நாடாளுமன்றக்குழுத்தலைவர் டி.ஆர்.பாலு அவர்களும் இது குறித்து கலந்தாலோசித்தோம். தங்களின் அரசு தயாராக இருக்கிறது என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

டி.ஆர்.பாலு அவர்கள் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் அவர்களிடம் விவரத்தை தெரிவிக்க, மத்திய அரசும் சிறப்பு ரெயிலில் தொழிலாளர்களை அனுப்பத்தயாராக உள்ளது.

தொழிலாளர்களை மீட்டு வர வேண்டும் என்பது குறித்து தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் அதுல்ய மிஸ்ரா அவர்களுக்கும் கடிதம் எழுதி இருக்கிறேன்.

தமிழக அரசுத்தரப்பில் இருந்து உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக வந்து சேர்வார்கள், காலம் தாழ்த்தாது மத்திய அரசிடமும், மராட்டிய அரசிடமும் தொடர்பு கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொழிலாளர்களுக்கான பயணச்செலவிற்கானப்பொறுப்பினையும், பரிசோதனைகளை உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து விரைந்து மீட்டு வரவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story