இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி


இன்று மாலை  ஆளுநரை சந்திக்கிறார்  தமிழக முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 4 May 2020 2:53 PM IST (Updated: 4 May 2020 2:53 PM IST)
t-max-icont-min-icon

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று சந்தித்து பேசுகிறார்.

சென்னை,

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசுகிறார். இன்று மாலை 5 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.  

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்  தொடர்பாக ஆளுநருடன் முதல்வர் ஆலோசனை நடத்தலாம் எனத்தெரிகிறது. இந்த ஆலோசனையில்  தமிழக சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. 


Next Story