தமிழக ஆளுநருடன் முதல் அமைச்சர் பழனிசாமி சந்திப்பு


தமிழக ஆளுநருடன் முதல்  அமைச்சர் பழனிசாமி சந்திப்பு
x
தினத்தந்தி 4 May 2020 5:13 PM IST (Updated: 4 May 2020 5:13 PM IST)
t-max-icont-min-icon

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல் அமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசினார்.

சென்னை, 

அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.  

இதனால், சென்னை உள்பட தமிழகத்தில்  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில்  இன்று முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இத்தகைய சூழலில், தமிழக முதல்வர் பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்தித்து பேசினார்.  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 


Next Story