சென்னை கோயம்பேடு சந்தை தற்காலிகமாக இடமாற்றம்
சென்னை கோயம்பேடு சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலில் இருந்தாலும், கோயம்பேடு சந்தையில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சமூக இடைவெளியை ஒருவரும் கடைபிடிக்கவில்லை.
சந்தையில் வியாபாரிகள், தொழிலாளர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்று வேகமாக பரவியது. இதைத் தொடர்ந்து, கோயம்பேடு சந்தையை வேறுஇடத்துக்கு மாற்ற அரசு அறிவுறுத்தியது. இதன்படி, கோயம்பேடு பூ மற்றும் பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையும் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, புறநகர் வியாபாரிகள் திருமழிசை சென்று காய்கறிகள் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமழிசையில் வரும் 7 ஆம் தேதி முதல் சந்தை செயல்படும் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story