தமிழகத்தில் சிக்கித்தவிக்கும் வெளிமாநிலத்தவர்கள் சொந்த ஊர் செல்வதற்கு உதவ ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம் - தமிழக அரசு உத்தரவு


தமிழகத்தில் சிக்கித்தவிக்கும் வெளிமாநிலத்தவர்கள் சொந்த ஊர் செல்வதற்கு உதவ ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம் - தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 5 May 2020 4:00 AM IST (Updated: 5 May 2020 2:53 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சிக்கித்தவிக்கும் வெளிமாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உதவுவதற்காக ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

இதுகுறித்து தமிழக தலைமைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா கட்டுப்பாடுகளால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் ஆங்காங்கே சிக்கித்தவிக்கும் ஆன்மிக, இன்பச்சுற்றுலா பயணிகள், மாணவர்கள் மற்றும் பலர் மாநிலங்களுக்கு இடையே பயணிப்பதற்கு மத்திய அரசு அனுமதித்து ஆணையிட்டுள்ளது.

இதற்காக ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாநிலத்துக்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது வெளிமாநிலங்களைச் சேர்ந்த மக்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு ஏதுவாக ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ப தமிழக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகளை ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமித்து அரசு உத்தரவிடுகிறது.

அதன்படி, ஆந்திர மாநிலத்தவருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக காகர்லா உஷா (செல்போன் எண்.99529 88286) இருப்பார். அதுபோல் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு எஸ்.ஜெ.சித்ரு (7358687333), பீகார் மாநிலத்தவருக்கு குமார் ஜெயந்த் (9444343536), நஜ்மல் ஹோடா (9443240569).

ஒடிசா, மேற்குவங்காளம்

சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலத்தவருக்கு கே.சீனிவாசன் (7070450459), நிஹார் ரஞ்சன் (9445468500), ஒடிசா மாநிலத்தவருக்கு சி.சமயமூர்த்தி (9442205111), மேற்கு வங்காள மாநிலத்தவருக்கு டி.பி.ராஜேஷ் (9500132000), அரியானாவுக்கு அனில் மேஷ்ராம் (9176172000),

இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தவருக்கு எம்.சுதாதேவி (8894735555), கர்நாடகா மற்றும் சிக்கிம் மாநிலத்தவருக்கு பி.சந்திரமோகன் (7305097834), கேரளாவுக்கு ஜானி டாம் வர்கீஸ் (8800656753), டி.ரிட்டோ சிரியாக் (7598363231).

மராட்டியம், தெலுங்கானா

மத்திய பிரதேசத்துக்கு ராஜேஷ் லக்கானி (7305097853), மராட்டியத்துக்கு பூஜா குல்கர்னி (9443806306), டெல்லியைச் சேர்ந்தவர்களுக்கு மங்கத்ராம் சர்மா (9940221100), பஞ்சாப்புக்கு ககன்தீப்சிங் பேடி (7305097828), ராஜஸ்தான் மாநிலத்தவருக்கு ஆர்.கே.ஜஜினியா (9442121322)

தெலுங்கானா மாநிலத்தவருக்கு என்.வெங்கடேஷ் (8903450789), உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தவருக்கு பிங்கி ஜோவெல் (9499040589), மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்காக பிரதீப் யாதவ் (9789117733) ஆகியோர் ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story