தமிழகத்தில் மதுபானக்கடைகளை திறக்கும் முடிவு மனமுவந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல - அமைச்சர் செல்லூர் ராஜூ


தமிழகத்தில் மதுபானக்கடைகளை திறக்கும் முடிவு மனமுவந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல - அமைச்சர் செல்லூர் ராஜூ
x
தினத்தந்தி 5 May 2020 12:17 PM IST (Updated: 5 May 2020 12:17 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மதுபானக்கடைகளை திறக்கும் முடிவு மனமுவந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் வருகிற 7-ந்தேதி முதல் சில நிபந்தனைகளுடன் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறந்து இருக்கும் என்றும், ‘பார்’கள் இயங்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில்  மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் மதுபானக்கடைகளை திறக்கும் முடிவு மனமுவந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கள்ள சாராயத்தை ஒழிப்பதற்காகவும், வெளிமாநிலங்களுக்கு சென்று மது வாங்குவதை தடுப்பதற்காகவும் தான் மதுபானக்கடைகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டது. 

எல்லோரும் கடையை திறந்த பின்பு நாம் மட்டும் திறக்காமல் இருக்க முடியாது, குடிமகன்களும், பொருளாதாரமும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே டாஸ்மாக்கை திறக்க முதல்-அமைச்சர் பழனிசாமி முடிவு செய்தார். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story