அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலிவாங்குவது தலைமைக்கு புரியவில்லையா? - கமல்ஹாசன்
அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலிவாங்குவது தலைமைக்கு புரியவில்லையா? என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் வருகிற 7-ந்தேதி முதல் சில நிபந்தனைகளுடன் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறந்து இருக்கும் என்றும், ‘பார்’கள் இயங்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுபானக் கடைகளை சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஊரடங்கினால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பை சரிசெய்யும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது நியாயமானதல்ல என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு என குறிப்பிட்டுள்ளார்.
கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 5, 2020
அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு.
Related Tags :
Next Story