செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று


செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 5 May 2020 4:00 PM IST (Updated: 5 May 2020 4:00 PM IST)
t-max-icont-min-icon

செங்ல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ள நிலையில், சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்திலும் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் இன்று ஒருநாளில் மட்டும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

நசரத்புரத்தில் 18 பேர், மதுராந்தகத்தில் 5 பேர், நந்திவரத்தில் 4 பேர், பம்மலில் 3 பேர், திருநீர்மலையில் 2 பேர் ரங்கநாதபுரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கிழக்கு தாம்பரத்தில் 2 பேர், ஜமீன் பல்லாவரத்தில் ஒருவருக்கு இன்று கொரோனா உறுதியாகியுள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 133 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

Next Story