கொரோனா வைரசை கண்டறிய அதிக அளவு பி.சி.ஆர். பரிசோதனை செய்யாதது ஏன்? - ஐகோர்ட்டு கேள்வி


கொரோனா வைரசை கண்டறிய அதிக அளவு பி.சி.ஆர். பரிசோதனை செய்யாதது ஏன்? - ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 6 May 2020 3:15 AM IST (Updated: 6 May 2020 2:22 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரசை கண்டறிய அதிக அளவு பி.சி.ஆர். பரிசோதனை செய்யாதது ஏன் என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை, 

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்தவர் வி.பொன்ராஜ். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு மட்டும் போதாது. வைரஸ் பாதிப்பு உள்ளவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி, தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம் ஆகும். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 10 லட்சம் பேருக்கு 452 பேருக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

உலக நாடுகளை ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. தமிழகத்திலும் எத்தனை பி.சி.ஆர். ஆய்வகங்கள் உள்ளன? என்பது குறித்தும், இவற்றில் அதிக அளவு பரிசோதனை மேற்கொள்ளாதது ஏன்? எனவும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா ஆகியோர், கொரோனா வைரசை கண்டறியும் பி.சி.ஆர்., பரிசோதனைகளை அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளாதது ஏன்? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 12-தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Next Story