டி.ஜி.பி. அலுவலகத்தில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா


டி.ஜி.பி. அலுவலகத்தில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 May 2020 2:29 PM IST (Updated: 6 May 2020 2:29 PM IST)
t-max-icont-min-icon

சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில், டி.ஜி.பி., அலுவலகம் செயல்படுகிறது. இங்கு, டி.ஜி.பி., - கூடுதல் டி.ஜி.பி.,க்கள் என, போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் பணியாற்று கின்றனர்.போலீசார் பீதிஇவர்களுக்கான முகாம் அலுவலகம் மற்றும் உளவுத்துறை, தொழில் நுட்ப பிரிவு, மோட்டார் வாகன பிரிவு என, பல பிரிவுகளின் அலுவலகங்களும் செயல்படுகின்றன. இந்த அலுவலகங்களில், 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். இரு தினங்களுக்கு முன், உளவுத்துறை காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும், இரண்டு போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

உடன், அந்த கட்டுப்பாடு அறை மூடப்பட்டு, அங்கு பணிபுரிந்தவர்கள், கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தற்காலிகமாக, கட்டுப்பாட்டு அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.

அதேபோல, தொழில் நுட்ப பிரிவில் பணிபுரியும், ஒரு போலீஸ்காரருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. மேலும், அவரது உறவினர்கள், எட்டு பேருக்கும் தொற்று உறுதியானது. மேலும் டி.ஜி.பி., அலுவலக துப்புரவு பணியாளர்கள், மூன்று பேருக்கு, நேற்று கொரோனா தொற்று உறுதியானது. 

இந்தநிலையில், சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 16 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காவல் துறை தலைமையிடமான டி.ஜி.பி., அலுவலகத்தில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அங்கு பணிபுரியும் போலீசார் பீதியில் உள்ளனர்.

Next Story