தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்


தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்
x
தினத்தந்தி 6 May 2020 3:13 PM IST (Updated: 6 May 2020 3:13 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் சந்திரசேகருக்கு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த  தமிழக வீரர் சந்திரசேகருக்கு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாராவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் நெல்லையை சேர்ந்த தமிழக வீரர் சந்திரசேகர் வீரமரணம் அடைந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்றும்,  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story