மதுக்கடைகளை திறக்கும் முடிவை கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
மதுக்கடைகளை திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி முழு மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் இன்றைய அரசின் வழிகாட்டியாக கூறப்படும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் விருப்பம் ஆகும்.
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இதற்கான வாக்குறுதியை அளித்த அவர், ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கட்டமாக 500 மதுக்கடைகளை மூடினார். அவருக்கு பிறகு முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமியும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இரண்டாம் கட்டமாக 500 மதுக்கடைகளை மூடினார்.
அதன்பின் கடந்த 3 ஆண்டுகளாக மதுக்கடைகள் மூடப்படாத நிலையில், இப்போது அதை செய்து தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த அற்புதமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனவே மதுக்கடைகளை திறக்கும் முடிவை கைவிட்டு, முழுமதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் உடனடியாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story