விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம்- முதல்வர் அறிவிப்பு
விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
சென்னை,
கிருஷ்ணகிரி அருகே கொரோனா தடுப்பு பணியின்போது லாரி மோதிய விபத்தில் மரணமடைந்த தலைமைக்காவலர் சேட்டு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் பணியில் இருந்தபோது தலைமைக்காவலர் சேட்டு விபத்தில் பலியானார்.
Related Tags :
Next Story