ஜூன் மாத இறுதிக்குப் பிறகு 10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை- பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்


ஜூன் மாத இறுதிக்குப் பிறகு 10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை- பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
x
தினத்தந்தி 8 May 2020 5:47 PM IST (Updated: 8 May 2020 5:47 PM IST)
t-max-icont-min-icon

ஜூன் மாத இறுதிக்குப் பிறகு பொதுத் தேர்வு கால அட்டவணை அறிவிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.  கொரோனா கட்டுக்குள் வராததால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் நிலவியது. 

இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செங்கோட்டையன் கூறியிருப்பதாவது:- ”10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடைபெறும். உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பின் ஜூன் மாத இறுதிக்குப் பிறகு பொதுத் தேர்வு கால அட்டவணையை அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


Next Story