தமிழகத்தில் 2-வது நாளில் ரூ.140 கோடிக்கு மது விற்பனை


தமிழகத்தில் 2-வது நாளில் ரூ.140 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 9 May 2020 1:00 AM IST (Updated: 9 May 2020 12:53 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 2-வது நாளில் ரூ.140 கோடிக்கு மது விற்பனை ஆனது.

சென்னை, 

தமிழகத்தில், சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 43 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்தக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. 2-வது நாளாக நேற்றும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

வழக்கமாக ஒரு நாளைக்கு ரூ.80 கோடிக்கும், சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களில் ரூ.100 கோடிக்கும், பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் ரூ.200 கோடிக்கும் மது விற்பனையாகும். 

தற்போது, 43 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், நேற்று முன்தினம் ரூ.170 கோடிக்கு மது விற்பனையானது. 2-வது நாளான நேற்று தமிழ்நாட்டில் மது விற்பனை ரூ.125 கோடி முதல் ரூ.140 கோடி வரை இருக்கும் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story