எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா? முழு விவரம்
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒருநாளில் மட்டும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
சென்னை,
தமிழகத்தில் இன்று 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,525-ஆக உயர்ந்திருக்கிறது. சென்னையில் மட்டும் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3330 ஆக உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், விழுப்புரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 293 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 31 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உள்ளது.
Related Tags :
Next Story