செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா


செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 May 2020 2:00 PM IST (Updated: 10 May 2020 2:00 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 184 ஆக இருந்தது. நேற்று ஒரே நாளில் புதிதாக 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. 

இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனாபாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பாதித்தவர்கள்  35 ஆண்கள் எனவும், 25 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் காய்கறி வியாபாரிகள் என தகவல் வெளியாகி உள்ளது. 

இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 284 ஆக உயர்ந்துள்ளது.

Next Story