வெளிநாட்டில் இருந்து வருபவர்களை முறையாக தனிமைப்படுத்தி வருகிறோம் - விஜயபாஸ்கர்


வெளிநாட்டில் இருந்து வருபவர்களை முறையாக தனிமைப்படுத்தி வருகிறோம் - விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 10 May 2020 5:40 PM IST (Updated: 10 May 2020 5:40 PM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் இருந்து வருபவர்களை முறையாக தனிமை படுத்தி வருகிறோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை,

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் புதிதாக 2,520 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  வெளிநாட்டில் இருந்து வருபவர்களை முறையாக தனிமைப்படுத்தி வருகிறோம்  தேர்வாகி காத்திருப்பு பட்டியலிலுள்ள செவிலியர்கள் தேவைக்கேற்ப பணியமர்த்தப்படுவர்.  

ஒருங்கிணைந்த சிகிச்சை முறையால் நாட்டிலேயே தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.  தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பிசிஆர் கருவிகள் இருப்பில் உள்ளன. சாதாரண சளி , காய்ச்சல் இருந்தாலும்  பரிசோதனை செய்து வருகிறோம்” என்றார். 


Next Story