பல்வேறு நாடுகளில் இருந்து மேலும் 11 லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர். கருவிகள் வாங்க நடவடிக்கை - சுகாதாரத்துறை அதிகாரி தகவல்


பல்வேறு நாடுகளில் இருந்து மேலும் 11 லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர். கருவிகள் வாங்க நடவடிக்கை - சுகாதாரத்துறை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 11 May 2020 1:30 AM IST (Updated: 11 May 2020 1:03 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு நாடுகளில் இருந்து மேலும் 11 லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர். கருவிகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தகவல் தெரிவித்தனர்.

சென்னை,

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய அதிக அளவில் பரிசோதனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், புதிதாக பாதிப்பு இருக்கா?, இல்லையா? என்று தெரிந்து கொள்ள ஆர்.டி.பி.சி.ஆர். கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தற்போது 52 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட பரிசோதனைகள் நடைபெறுகிறது.

இந்த நிலையில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கருவிகள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தமிழக அரசு மேலும் 11 லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர். கருவிகள் வாங்க பல்வேறு நாடுகளில் உள்ள நிறுவனங்களிடம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் முதல் கட்டமாக தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர். கருவிகள் விரைவில் வரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story