துபாயில் இருந்து தமிழகம் திரும்பிய 359 பயணிகளுக்கு கொரோனா தொற்று இல்லை - அதிகாரி தகவல்
துபாயில் இருந்து தமிழகம் திரும்பிய 359 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அதிகாரி தெரிவித்தார்.
சென்னை,
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் விமான சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு செய்து வருகிறது. அந்த வகையில் தூபாயில் சிக்கி தவித்த தமிழர்களை மீட்க சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த வகையில் 2 சிறப்பு விமானங்கள் மூலம் துபாயில் உள்ள 359 பேரை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து 2 விமானங்களும் துபாயில் இருந்து 359 பேரை ஏற்றிக்கொண்டு சென்னை வந்தன. அதில் பயணம் செய்த 359 பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் சென்னை விமானநிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்களை வீட்டு கண்காணிப்பில் வைக்க சுகாதாரத்துறை முடிவு செய்தது. அந்த வகையில் வண்டலூர், கேளம்பாக்கம் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 230 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். மற்றவர்கள் தங்கள் சொந்த செலவில் ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் பெரியமேடு பகுதியில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்கள் சொந்த செலவில் தங்கினர். இந்த நிலையில் நேற்று வந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
துபாயில் இருந்து நேற்றுமுன்தினம் 2 விமானங்கள் மூலம் 359 பேர் தமிழகம் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் முடிவுகள் நேற்று வந்தது.
இதில் அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அவர்கள் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story