விழுப்புரத்தில் கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவி மரணம்


விழுப்புரத்தில் கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவி மரணம்
x
தினத்தந்தி 11 May 2020 12:13 PM IST (Updated: 11 May 2020 12:13 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்ததில் சிகிச்சை பெற்று வந்த 10ம் வகுப்பு மாணவி உயிரிழந்து உள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே சிறுமதுரை கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயபால்.  இவரது மகள் ஜெயஸ்ரீ (வயது 15).  அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இவரது தந்தையுடன் ஏற்பட்ட தகராறில், தனியாக வீட்டில் இருந்த ஜெயஸ்ரீ மீது நேற்று 2 பேர் தீ வைத்து எரித்து உள்ளனர்.  பள்ளி மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் அவரை கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு தப்பியோடி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் முருகன் (வயது 51) மற்றும் கலியபெருமாள் (வயது 60) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயஸ்ரீ இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.  2 பேர் கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்ததாக மாணவி மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.  இதனால், 2 பேர் மீதுள்ள கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story