வெளிமாநில தொழிலாளர்கள் ஒரு வாரத்தில் சொந்த ஊருக்கு திரும்புவார்கள்; முதல் அமைச்சர் பழனிசாமி உறுதி


வெளிமாநில தொழிலாளர்கள் ஒரு வாரத்தில் சொந்த ஊருக்கு திரும்புவார்கள்; முதல் அமைச்சர் பழனிசாமி உறுதி
x
தினத்தந்தி 11 May 2020 1:58 PM IST (Updated: 11 May 2020 1:58 PM IST)
t-max-icont-min-icon

வெளிமாநில தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்குள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என முதல் அமைச்சர் பழனிசாமி உறுதி தெரிவித்து உள்ளார்.

சென்னை,

தமிழக தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில், கடந்த 2 நாட்களாக சில மாவட்டங்களில் இருந்து வெளிமாநில தொழிலாளர்கள் ரெயில் மூலம் அனுப்பப்படுகின்றனர். வேலை இல்லாத நிலையில் வெளிமாநில தொழிலாளர்களிடம் தற்போது ரெயில் கட்டணத்துக்கான பணம் இருக்காது.  அவர்களுக்கான பயண கட்டணத்தை அவர்கள் சேர்ந்த மாநில அரசுகளே செலுத்தலாம் என கூறப்பட்டது. ஆனால் தற்போது பல மாநிலங்கள் தொகையை செலுத்தாத நிலையில் தற்போது தமிழக அரசே செலுத்த முடிவெடுத்துள்ளது.  அவர்களுக்கான குடிநீர், உணவு ஆகியவற்றையும் மாநில அரசே வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து சொந்த ஊர் திரும்புவதை அனுமதிக்க வேண்டாம் என மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் இதுபோன்ற சென்ற தொழிலாளர்களில் 16 பேர் மராட்டியத்தில் சரக்கு ரெயில் மோதி பலியானார்கள்.  இந்த நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்குள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி தெரிவித்து உள்ளார்.

இதுவரை 9 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் 8 ரெயில்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  ஊருக்கு அனுப்பி வைக்கும் வரை வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் முகாம்களில் தங்கியிருக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story