வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு அனுமதி வழங்குவது குறித்து ஆய்வு - ஐகோர்ட்டில் அரசு தகவல்
வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு அனுமதி வழங்குவது குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
ஊரடங்கினால் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிப்பாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த வழிப்பாட்டு தலங்களை திறப்பதற்கு அனுமதி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் ஜலீல் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது, மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வருகிற 15 மற்றும் 17-ந்தேதிகள் மத்திய, மாநில அரசுகள் ஆய்வு செய்ய உள்ளது.
அதனால், இந்த வழக்கை வருகிற 18-ந்தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Related Tags :
Next Story