கடலூரில் பயிற்சிக்கு வந்த 14 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
கடலூரில் பயிற்சிக்கு வந்த 10 பெண் காவலர்கள் உட்பட 14 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கடலூர்,
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. பாதிப்புக்கு ஏற்ப சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் 8 ஆயிரத்து 2 பேர் பாதிப்படைந்து உள்ளனர். 2,051 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். 53 பேர் பலியாகி உள்ளனர்.
கடலூரில் காவலர் பயிற்சி பள்ளிக்கு பயிற்சிக்காக வந்தவர்களில் 10 பெண் காவலர்கள் உட்பட 14 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து கடலூர் காவலர் பயிற்சி பள்ளி மூடப்பட்டு உள்ளது. இதேபோன்று, பயிற்சியில் உள்ள 124 பெண் காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story