பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ந் தேதி முதல் தொடங்கும்


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ந் தேதி முதல் தொடங்கும்
x
தினத்தந்தி 12 May 2020 11:12 AM IST (Updated: 12 May 2020 3:53 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் முதல் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

கொரோனா பாதிப்பு காரணமாக  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.  கொரோனா கட்டுக்குள் வராததால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் நிலவியது. 

இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இது குறித்து  அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது;-

ஜூன் 1 முதல் 12 வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.தள்ளி வைக்கப்பட்ட பிளஸ் 1 வகுப்பின் ஒரு பாடத்திற்கான தேர்வு ஜூன் 2ல் நடைபெறும்.

சமூக இடைவெளியுடன் தேர்வு நடத்த ஏற்பாடுகள் நடைபெறுகிறது.பள்ளி திறப்பு குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை தேர்வுகளை நடத்துவதில் மட்டுமே முன்னுரிமை என கூறினார்.

Next Story