சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரெயில்களை இயக்க வேண்டாம்- முதல் அமைச்சர் கோரிக்கை


சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரெயில்களை இயக்க வேண்டாம்- முதல் அமைச்சர் கோரிக்கை
x
தினத்தந்தி 12 May 2020 6:04 PM IST (Updated: 12 May 2020 6:04 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா கட்டுக்குள் வரும் வரை சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரெயில்களை இயக்க வேண்டாம் என்று முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

கொரோனா கட்டுக்குள் வரும் வரை சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரெயில்களை இயக்க வேண்டாம்  என்று  மத்திய உள்துறை, ரெயில்வே துறை அமைச்சருக்கு   தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னைக்கு டெல்லியில் இருந்து இயக்கப்படும் ராஜ்தானி ரயில் பெட்டி குளிர்சாதன வசதி கொண்டது. எனவே சென்னைக்கு வரும் பயணிகளை பி.சி.ஆர். பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுப்ப முடியும். அந்த பயணிகளை ரயில்வே துறையே தனிமைப்படுத்தி வைக்க  வேண்டும் எனவும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதற்கிடையே, சென்னைக்கு வருகிற 14, 16 ஆகிய 2 தேதிகளில் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என்று ரெயில்வே அறிவித்துள்ளது.  பிரதமருடனான காணொலியில் முதல்வர் பழனிசாமி விடுத்த கோரிக்கையை ஏற்று ரெயில்வே இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. 

Next Story