பிரதமர் மோடி ஆற்றிய உரை வெற்று பக்கம்; நிர்மலா சீதாராமன் நிரப்புவார் - ப.சிதம்பரம்


பிரதமர்  மோடி ஆற்றிய உரை வெற்று பக்கம்; நிர்மலா சீதாராமன்  நிரப்புவார் - ப.சிதம்பரம்
x
தினத்தந்தி 13 May 2020 3:43 PM IST (Updated: 13 May 2020 3:43 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை வெற்று பக்கம் அதை நிர்மலா சீதாராமன் நிரப்புவார் என ப.சிதம்பரம் கூறினார்.

சென்னை

நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரையாற்றிய பிரதமர் மோடி  

தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்றும் நாடு முழுவதும் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் என்று அறிவித்தார்.

பிரதமர் உரை குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டு உள்ள டுவிட்டில் கூறி இருப்பதாவது;-

பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை வெற்று பக்கங்கள் அந்த வெற்று பக்கத்தை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிரப்புவார் என்று எதிர்ப்பார்கிறோம்.

பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு என்ன செய்யப்போகிறது என்பதை கவனமாக கணக்கிடுவோம். முதலில், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நடந்து வீடு திரும்பும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு இந்த அரசு என்ன செய்யப்போகிறது என்பதை பார்க்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story