தமிழகத்தில் மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது


தமிழகத்தில் மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 13 May 2020 7:39 PM IST (Updated: 13 May 2020 7:45 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 9227 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை,

கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் ஊரடங்கில் பல்வேறு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா வைரசின் பாதிப்பு இந்த மாதம் தொடங்கிய முதல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அதைப்போல் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

தமிழகத்தில் நேற்று மேலும்  716 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 718 ஆக  இருந்தது.  கொரோனா பாதிப்பால் நேற்று ஒருநாளில் மட்டும் 8 பேர் பலியானதன் மூலம், இதுவரை ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 61 ஆக இருந்தது. 

இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட  அறிக்கையின் படி, மேலும்  509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 9227-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு நாளில் மட்டும் 380 -பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5262-ஆக அதிகரித்திருக்கிறது. 

கொரோனா பாதிப்பால் மேலும்  3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 64-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2176- ஆக உயர்ந்துள்ளது. 


Next Story